



Published on 01/04/2018 | Edited on 01/04/2018
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வள்ளுவர் கோட்டம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பச்சைத்துண்டு அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஸ்டாலின், வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் கைதை கண்டித்து நெல்லையில் கனிமொழி சாலை மறியலில் ஈடுப்பட்டார். நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன்பு திமுகவினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். திமுகவினர் சாலை மறியலால் நெல்லையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.