புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களிடம் கவர்னர் குறை கேட்கக்கூடாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாராயணசாமி, மக்களை சந்திப்பதை ஏன் இவ்வளவு எதிர்க்கிறார் என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மக்களின் பிரதிநிதியாக ஒருவருக்கு நல்லது நடந்தால் சந்தோசம் தானே. மக்கள் நலனை விட இவர்கள் ஈகோ தான் பிரச்சனை. யாரை சந்திக்கிறேன். மக்களைத்தானே சந்திக்கிறேன். தீவிரவாதிகளையா சந்திக்கிறேன். ஆளுநர் என்றாலே அலர்ஜி ஆகிவிடுகிறது.
மக்களை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவரோ அல்லது பொது வாழ்க்கையில் இருப்பவர்களோ கூறினால் அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். சரி மக்களை சந்திக்க எனக்கு அதிகாரம் இல்லை எனச் சொல்லும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது” எனக் கேள்வி எழுப்பினார்.