காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் டெல்லியில் வேதங்களைப் பரப்புவதற்கான "காஞ்சி பீட கலாச்சார மையம்' என்கிற அமைப்பு, வேத கோஷங்கள் முழங்க டிசம்பர் 1-ந் தேதி கோலாகலமா திறக்கப்பட்டுள்ளது என்கின்றனர். சங்கரமடம் ஏகப்பட்ட சிக்கல்களில் இருக்கும் நிலையில், இது ஆறுதலான நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது. மறைந்த ஜெயேந்திர சங்கராச்சாரிக்கு வேண்டிய ஜெயகவுரியின் நிர்வாகத்தில், கேரள மாநில திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி இயங்கிக்கிட்டு இருக்கிறது என்கின்றனர். இந்த சொத்து தொடர்பாக துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்திக்கும் சங்கரமடத்துக்கும் இடையில் பிரச்சினை இருந்தது.
![kanchi](http://image.nakkheeran.in/cdn/farfuture/m1PlA0E6EqJlwFq3d-qqlyNRf2gfWzFhZthRAiQrey4/1575633664/sites/default/files/inline-images/828_0.jpg)
இந்த நிலையில், இனி சங்கரமட நிர்வாகத்தில் எந்த வகையிலும் மூக்கை நுழைக்கக் கூடாது என்கிற நிபந்தனையோடு, குருமூர்த்தியுடன் சங்கரமடத் தரப்பு ஒரு ஒப்பந்தத்தை அண்மையில் போட்டிருப்பதாக கூறுகின்றனர். அதன்படி, காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் போகும் வழியில் உள்ள சங்கரமடத்தின் பிராஞ்சான கலவை மடம், அதன் சொத்து பத்துக்களோடு குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்கின்றனர்.