Skip to main content

“இந்தியா கூட்டணி உருப்படாத ஒன்று” - மத்திய இணை அமைச்சர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
India alliance is more says Union Minister of state l murugan

ஈரோட்டில் இருந்து நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று அந்த ரயிலை ஈரோடு ரயில்வே நிலையத்தில் கொடி அசைத்து  துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய அவர், “பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூபாய் 11 லட்சம் கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் விமான நிலையங்கள், நான்கு வந்தே பாரத் ரயில்கள், மேம்பாலங்கள், சாலைகள், ஏழைகளுக்கான வீடுகள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, விவசாயிகளுக்கான ரூபாய் 6000 ஆண்டுதோறும் மானியம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 800 கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக ஈரோடு, தாராபுரம், பழனி மார்க்கமாக புதிய ரயில் வழித்தடம் 75 ரயில்வே ஸ்டேஷன்கள் பன்னாட்டு தளத்துக்கு வர உள்ளன. தமிழகத்தில் மட்டும் சென்னை எக்மோர், காட்பாடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, கோவை, சேலம் போன்ற ரயில் நிலையங்கள் அடங்கும் ரயில் பாதை நூறு சதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே நிலையம் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. ஈரோடு நெல்லை எக்ஸ்பிரஸ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கோட்டை வரை தற்போது நீட்டிக்கப்படுகிறது. 

அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, தென்காசி செல்லவும் அங்கிருந்து ஈரோடு வந்து ஜோலார்பேட்டை சென்னை செல்லவும், இது பெரிதும் வசதியாக இருக்கும். தமிழகத்தில் சென்னை - நெல்லை, சென்னை - பெங்களூர், ஈரோடு - பெங்களூர், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது உள்நாட்டிலேயே நமது பெரம்பூர் ஐ.சி.எப் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரயில்வே துறையில் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2047க்குள் இந்தியா ஒரு வளர்ந்த தேசமாக வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. நவீன் சக்தி என்ற திட்டத்தின பிரதமர் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்துகிறார். மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் பணிக்காக சுமார் 60 லிருந்து 70% நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துள்ளது. விரைவில் எலிவேட்டர் காரிடர் எனப்படும் மேம்பாலங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வசதி ஏற்படுத்தப்படும். 

அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டதையும், பிரதமர் கலந்து கொண்டதையும் அனைவரும் வரவேற்கின்றனர். 500 ஆண்டு மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மீன் வளத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்திராயன் மூலம் ரூபாய் 600 கோடி செலவில் சந்திரனின் தென்துருவத்தை நாம் அடைந்துள்ளோம். இது எந்த நாடும் செய்யாதது. உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இந்தியா கூட்டணி உருப்படாத ஒன்று. இளைஞர் அணி மாநாடு நமத்து போன மிக்சர் என்று சில பத்திரிகைகள் கூறியுள்ளன” என்றார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்து 29 காசு திருப்பி தரப்படுகிறது? என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்கையில் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப நிதி உதவி செய்யப்படுகிறது, என கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.