இது செந்தில் பாலாஜிக்கு வந்த நெஞ்சுவலி மட்டுமல்ல திமுகவிற்கே வந்த நெஞ்சுவலி என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ''செந்தில்பாலாஜி எனக்கு 2006 ஆம் ஆண்டு அறிமுகமான பழைய நண்பர். அமமுகவில் இரண்டு ஆண்டுகள் என்னுடன் பணியாற்றியவர். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்றப்படுகிறது என்பது உண்மையாக வருத்தம் அளிக்கிறது. அதேநேரத்தில் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அவருக்கு வந்த நெஞ்சு வலி செந்தில் பாலாஜிக்கு மாத்திரம் அல்ல திமுகவிற்கே வந்த நெஞ்சுவலி என்பதுதான் உண்மை. அமலாக்கத் துறையின் டெக்னாலஜி, அவர்களுடைய நடைமுறைகள் எல்லாம் தவறு நடந்தால் எடுக்கக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. எனவே இது திமுகவிற்கு பெரிய தலைவலியான விஷயம்தான். முக்கியமான பலபேருக்கு நெஞ்சு வலி வருகின்ற நிலைமைதான் இருக்கிறது.
தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னி மாதிரி திமுக தனக்கு வந்தால் தான் அறிவிப்பார்கள். இதே ஸ்டாலின் கடந்த காலத்தில் பேட்டி கொடுத்ததை சோசியல் மீடியாவில் போட்டுள்ளார்கள். நெருப்பில்லாமல் புகையாது. இதில் முகாந்திரம் இருப்பதால்தான் அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. இதை பழிவாங்கும் நடவடிக்கை அது இது என்று ஒவ்வொரு மனிதருடைய மனநிலையில் இருந்தும் பதில் சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் விசாரணைக்கு கூப்பிட்டால் போய் தான் ஆக வேண்டும். என்னைக் கூடதான் டெல்லிக்கு மூன்று முறை கூப்பிட்டார்கள்'' என்றார்.