Published on 14/06/2019 | Edited on 14/06/2019

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதால் ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.இதனால் இவர் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார்.இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறும் போது, தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் பா இரஞ்சித் ராஜராஜ சோழனை குறித்து அவதூறாகப் பேசியது ஏற்புடையது அல்ல. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற கருத்துகளை யாரும் ஆதாரம் இல்லாமல் பேசாதீர்கள். இதுபோன்ற கருத்துகளைப் பேசி தன்னிகரற்ற அரசனை பெயர் தரம்குறைய செய்யாதீர்கள்” என கூறியுள்ளார்.