
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தற்போது தனி கட்சி தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் "காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதையை கொடுப்பதில்லை எனவும் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருப்பதாகவும் ராகுல் காந்தியே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் விரைவில் தனி கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர் "தனது கட்சியின் முதல் பிரிவு ஜம்மு காஷ்மீரில் தொடங்கப்படும். காங்கிரசில் இருந்து விலகியது திடீரென எடுக்கப்பட்ட முடிவு இல்லை. மீண்டும் காங்கிரஸில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. பாஜகவில் இணையப்போவதாக கடந்த மூன்று ஆண்டுகளாக பலரும் கூறி வந்தனர். அவர்களுக்கு நான் புதிய கட்சியை தொடங்கியதே பதில்" என கூறியுள்ளார்.