Skip to main content

அதிமுக பொது செயலாளர் ப்ளான்... சசிகலாவை கழட்டி விட முடிவு... ... தீவிர ஆலோசனையில் எடப்பாடி!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

24-ந் தேதி கூட இருக்கும் அ.தி.மு.க. பொதுக் குழுவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வியூகங்கள் தான் பிரதானமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கின்றனர். அப்புறம், பொதுக் குழுவிலேயே கட்சியின் பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்று  திட்டம் போட்டு வைத்திருந்த முதல்வர் எடப்பாடி, நிலைமையை நினைத்து, இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது . ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.சின் கூட்டுத் தலைமையே தொடரும். சசிகலாவைக் கட்சியில் சேர்க்கும் தீர்மானம் எதுவும் பொதுக்குழுவில் இருக்காது என்றும் கூறுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றினால்தான் வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலைத் தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்று எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் நினைப்பதாக சொல்லப்படுகிறது. அது சம்பந்தமாக பொதுக்குழுவில் ஆலோசனை இருக்கும் என்கின்றனர். 
 

admk



மேலும் மேயர், சேர்மன் சீட்டுக்கு கலெக்ஷன் ஜரூராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.இது பற்றி விசாரித்த போது, மாஜி மந்திரியான தளவாய் சுந்தரம், தன்னோட குமரி மாவட்ட எல்லையைத் தாண்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அரசியலிலும் மூக்கை நுழைப்பது, அந்தப் பகுதி அ.தி.மு.க.வினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருப்பதாக கூறுகின்றனர். இப்படி பல பகுதிகளிலிருந்தும் வரும் புகார்களை எப்படி சரி பண்ணுவது என்கிற ஆலோசனையில் எடப்பாடி இருப்பதாகவும் கூறுகின்றனர். 

 

Kamal

 

சார்ந்த செய்திகள்