முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும், 22 சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலும் எங்களுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசுதான்.
அதனை கடுமையாக எதிர்த்தது அதிமுக. உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு வரும்போது அதற்காக வாதாடியது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். இனி எந்த அரசு வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறினார்.
திமுக தலைவர் கலைஞர் போட்டியிட்ட திருவாரூர் தவிர 21 தொகுதிகளிலும் அதிமுக எம்எல்ஏக்கள் இருந்தனர். மீடியாக்கள்தான் தினகரனை பெரியதாக காட்டுகின்றன. மக்களிடத்தில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை நாங்கள் தெரிந்துள்ளோம். 22 தொகுதிகளிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.