Skip to main content

ஒரு கோடி நிதி அறிவித்த செந்தில் பாலாஜி!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

dmk


 

dmk



இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடியை திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வழங்கியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவிக்கும் போது, "கழக தலைவர் தளபதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரொனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 1,00,00,000 (ஒரு கோடி) வழங்கி உள்ளேன்" என்று கூறியுள்ளார். அதோடு எந்த மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளார் என்ற விவரமும் குறிப்பிட்டுள்ளார்.  ஏற்கனவே தருமபுரி எம்.பி டாக்டர்.செந்தில்குமார் ரூபாய் ஒரு கோடி அறிவித்தார் என்பது குறிப்படத்தக்கது.  

 

சார்ந்த செய்திகள்