Skip to main content

மக்களுக்கு கவலையை கொடுக்காதீங்க...! -மோடி அரசுக்கு த.மா.கா. வேண்டுகோள்

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

don't give more pressure to public yuvaraja requested modi government s

 

 

மக்களின் வாழ்வியல் நிலையை புரிந்துகொள்ள வேண்டும் ஆளும் அரசுகள் என நம்மிடம் கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்,


“நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் செப் 1ம் தேதி முதல், அதாவது நாளை முதல் கட்டணத்தை உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

கரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தளர்வு செப்டம்பர் 1 முதல்   என அரசு அறிவித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. மாறாகக் ஊரடங்கு ஆரம்பித்து  162 நாட்கள் கடந்த நிலையில் பெட்ரோலுக்கு ரூபாய் 13.71ம்,  டீசலுக்கு  ரூபாய் 13.15ம்  எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. வங்கிகளில் வாங்கிய கடனுக்கு தவணை தொகையை செலுத்த முடியாமல் தள்ளாடிவரும் நிலையில்  வங்கி கடன் தவணை தொகையை செலுத்த வங்கிகள் இப்போதே அலைபேசி வழியாக தொடர்புகொள்ள தொடங்கிவிட்டன.

 

மக்கள் கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக வேலையில்லாமல் இப்போதுதான் மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருபக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறுபக்கம் சுங்க கட்டணம் உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுங்க கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்படும். எனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் அரசின் இந்தமாதிரியான நடவடிக்கைகள்  மக்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. எனவே தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக இத்தகைய கட்டண உயர்வை  கைவிட வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்