தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணியின் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை தொகுதியின் உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றத் தேர்தலில் கரூரில் யார் தேர்தலை நிறுத்த முயற்சி செய்தார்கள், வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று கரூர் மக்களுக்குத் தெரியும்.போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் தோல்வி பயத்தில் மீண்டும் ஒருமுறை அதேமுயற்சியில் இறங்கியிருக்கிறார். அதை முறியடித்து மீண்டும் வெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.