Skip to main content

திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

தமிழக சட்டசபை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு வருகிற ஜூன் 28ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்ட தொடரில் தண்ணீர் பிரச்சனை மற்றும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கியமானதாக இருக்கும் என்று தெரிகிறது. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை சட்டமன்ற செயலாளரிடம் திமுகவினர் கொடுத்தனர். 
 

dmk



திமுகவின் மனுவை ஏற்று சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ஜூலை 1ம் தேதி கொண்டுவரப்படும் என்று தனபால் தெரிவித்தார். இந்த நிலையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் திமுகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 108 இடங்களே உள்ளதால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தினகரன் திமுகவின் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் 109 உறுப்பினர்கள் தற்போது வரை திமுகவின் முடிவிற்கு ஆதரவாக உள்ளனர். இதனால் திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் 117 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் தோல்வி தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்