Published on 11/07/2019 | Edited on 11/07/2019
தமிழகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கனிமொழி. மக்களவையில் திமுக குழு துணை தலைவராகவும் கனிமொழி உள்ளார். இன்றைய ரயில்வேயின் நிலை குறித்தும் புல்லட் ரயில்கள் குறித்தும் குறிப்பிட்டு மக்களவையில் திமுக எம்பி கனிமொழி இன்று ஆவேசமாக கேள்வி ஒன்றை எழுப்பி பேசினார். இரயில்வேயில் இன்னும் பணியாளர்களை கொண்டு மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த செயலால் வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நமக்கு புல்லட் ரயில்கள் கிடைத்தாலும் அது முக்கியமில்லை. இரயில்வே துறையில் மனித மலத்தை அள்ளும் வேலையை ஊழியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி மனித கழிவுகளை அள்ளி வருகிறது. இந்த நிகழ்வு இன்னும் தொடர்வது நாட்டிற்கு வெட்கக்கேடானது என்று கூறினார்.