Skip to main content

திமுகவில் துரைமுருகன் இடத்தில் கனிமொழியா? கூர்ந்து கவனிக்கும் திமுக சீனியர்கள்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

திமுக பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறது திமுக தலைமை. பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
 

dmk



இந்த நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் சீனியரான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று கூறுகின்றனர். இதனால் அவருடைய பொருளாளர் பதவிக்கு திமுகவில் இருக்கும் சீனியர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட பலரும் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க. மகளிரணியினருக்கு மாநிலப் பொறுப்பில் இப்போது பிரதிநிதித்துவம் இல்லாததால், கனிமொழிக்கு கட்சியின் பொருளாளர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று அவர் தரப்பினர் காய் நகர்த்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதைக் கட்சியின் சீனியர்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர். இதனால் திமுகவில் பொருளாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பில் திமுகவினர் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்