தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தி.மு.க. தரப்பில் உற்சாகம் கூடியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி விசாரித்த போது, உள்ளாட்சித் தேர்தலில் அதிகார அத்துமீறல்களில் ஆளுங்கட்சி இறங்கியும், இந்த அளவிற்கு வெற்றி சதவீதம் கிடைத்துள்ளது என்று அறிவாலயத் தரப்பு மகிழ்ச்சியில் திளைக்கிது. அதேபோல் சென்னையில் தென் சென்னை தி.மு.க. சார்பில், கலைஞர் கணினி கல்வியகத்தை மா.செ.வான மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உருவாக்கி இருக்கார். பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கி இளங்கலை மற்றும் முதுகலையில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இதன் மூலம் கணினி தொடர்பான முக்கிய பாடங்களை இலவசமாக நடத்த இருப்பதாக கூறுகின்றனர். இங்கு பயிற்சி பெறும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவும் திட்டங்கள் வகுக்கத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தக் கணினி கல்வியகத்தை சைதாப்பேட்டையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தென் சென்னை தி.மு.க.வின் இந்த முயற்சி பெண் சமூகத்தை மிகவும் கவர்ந்திருப்பதாக சொல்கின்றனர்.