Skip to main content

அண்ணா சிலைக்கு அவமரியாதை

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Disrespect to Anna's statue

 

விழுப்புரத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

புதுச்சேரி விழுப்புரம் சலையில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் அண்ணா சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணாவின் சிலைக்கு ஆ.ராசாவின் புகைப்படத்தை மாட்டி, புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, சிலையின் முகத்தை திமுக கொடி கொண்டு மூடியுள்ளனர்.

 

தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள் அண்ணாவின் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த காலணி மற்றும் ஆ.ராசாவின் புகைப்படத்தை அகற்றி விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய தாம்பரம் மேயர்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) திமுகவினரும், அதிமுகவினரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிலையில் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

Next Story

பேரறிஞர் அண்ணாவின் 115வது  பிறந்தநாள் விழா (படங்கள்)

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி இன்று  அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் உள்ள படத்திற்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,பி.கே சேகர்பாபு, மேயர்பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அங்கு இருக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.