Skip to main content

எனக்கு ஒரு டவுட்டு... வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாறுகிறாரா? ராமதாஸ் ட்வீட்டிற்கு தி.மு.க. எம்.பி. கேள்வி!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

dmk

 


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதில், தி.மு.க. தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ராமதாஸின் இந்தக் கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் யார் அந்த அரசியல் தலைவர் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். 
 


இந்த நிலையில் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் பதிவுக்கான பின்னூட்டத்தில் பலரும் பல தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், கலைஞர் குறிப்பிட்டது அ.தி.மு.க., தி.மு.க., தி.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.௧., காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், வி.சி.க., ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல! என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், எனக்கு ஒரு டவுட்டு, இந்தப் பதிவின் மூலம்- 2021 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கூட்டணி மாற்றங்களுக்கான கணக்கினை தொடங்குகிறாரா ஐயா மருத்துவர் ராமதாஸ் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்