Skip to main content

'தனி சின்னத்தில் போட்டி' - மதிமுக விருப்பம்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
n

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தற்போதே துவங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள மதிமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மதிமுகவின் துரை வைகோ விருதுநகர், திருச்சி அல்லது திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என மதிமுகவினர் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணகிரியில் துரை வைகோ போட்டியிட இருப்பதாக முன்னதாகத் தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார் மதிமுகவின் துரை வைகோ.  

தனி சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தொண்டர்கள் வைத்துள்ளனர். எங்களுடைய விருப்பத்தை கூட்டணியின் தலைவரான முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிடுவதற்காக தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு திருச்சி, ஈரோடு, விருதுநகர், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சி உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளோம் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்