நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, பா.ஜ.க கட்சியின் மத்திய சென்னை வேட்பாளராக வினோஜ் பி செல்வம் அறிவிக்கப்பட்டதால், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி மாலை கோபாலபுரம் ஐந்தாவது தெரு, ஆறாவது தெருக்களில் வினோஜ் பி செல்வம் வாக்கு சேகரித்த போது, சிறு குழந்தைகள் கொடி பிடித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட படம்.
குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைய விதி உள்ளது. அதை பாஜக வேட்பாளர் மீறியுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.