திமுக எம்பி தயாநிதி மாறன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'கரோனா நேரத்தில் அமெரிக்க அரசும், ஏழை நாட்டின் அரசும் பொதுமக்களுக்குத் தேவையான பொருளுதவி, பண உதவிகளைத் தருகிறது. ஆனால் நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள். மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில், மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு மட்டுமே என்று தயாநிதி மாறன் கூறியிருந்தார்.
மத்தியஅரசு 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி நேரடியாகவும் 15,000 கோடி சிகிச்சைக்காகவும் 12,000 கோடி மாநிலங்களுக்கும் தந்துள்ள சூழ்நிலையில் பாரத நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்றும் மக்களை காத்த பிரதமரை பிச்சை வாங்குவதாக கூறியதற்கு தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். pic.twitter.com/Xt4knV6JVF
— H Raja (@HRajaBJP) April 19, 2020
இந்த நிலையில் தயாநிதி மாறன் கூறிய கருத்துக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மத்தியஅரசு 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி நேரடியாகவும் 15,000 கோடி சிகிச்சைக்காகவும் 12,000 கோடி மாநிலங்களுக்கும் தந்துள்ள சூழ்நிலையில் பாரத நாட்டு மக்களைப் பிச்சைக்காரர்கள் என்றும் மக்களைக் காத்த பிரதமரைப் பிச்சை வாங்குவதாகக் கூறியதற்கு தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், தான் ஊழல் செய்து சொத்து சேர்த்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விசாரணை கமிஷன் வைக்கப்பட்டதைப் பயன்படுத்தி தொண்டர்களிடம் பிச்சையெடுத்த கலைஞரின் பேரன் தயாநிதியின் திமிர் பேச்சு கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டுள்ளார். இதனால், எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு திமுகவினர் பலர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.