கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,281 லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 லிருந்து 114 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 319 லிருந்து 326 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748, தமிழகத்தில் 621, டெல்லியில் 523, கேரளா 327, தெலங்கானா 321, உத்தரப்பிரதேசம் 305, ஆந்திரப்பிரதேசம் 266, ராஜஸ்தானில் 288 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வடிவேலு பார்த்திபன் ஜோக் நினைவு வருகிறது.
இங்கு நல்ல மீன் விற்கப்படும்
மற்றவர்கள் என்ன கெட்ட மீனா விக்குறாங்க
இங்கு மீன் விற்கப்படும்.
மீன் கடைல வேற என்ன விப்பாங்க
இங்கு விற்கப்படும்
இங்கு விக்காம வேற எங்க..
விற்கப்படும்.
இந்த போர்ட் விற்கப்படுமா
அதுவும் எடுக்கப்படுகிறது
— H Raja (@HRajaBJP) April 6, 2020
இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கரோனா வைரஸ் பரவல் குறித்தும்,பிரதமர் மோடி குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், நாடு பிரதமரோடு என்பதை ஏப்ரல் 5-ஆம் தேதி காணமுடிந்தது.மிகவும் முன்னேறிய நாடுகளில் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்) படும் பாட்டை பார்க்கையில் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் எடுத்துள்ள படிப்படியான நடவடிக்கைகள் நாட்டைப் பெருமளவு பாதுகாத்து வருகின்றது.நாம் நம் பகுதியில் கீழ்க்கண்ட துறையினருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் போட்டு, கையெழுத்திட்டு அவரவர் துறைகளில் தரவும். மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், வங்கிகள் & தபால்துறை, அத்யாவசியத் துறைகளில் பணியாற்றுவோர் இவர்களின் அலப்பறிய பணிக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடிவேலு பார்த்திபன் ஜோக் நினைவு வருகிறது. "இங்கு நல்ல மீன் விற்கப்படும். மற்றவர்கள் என்ன கெட்ட மீனா விக்குறாங்க?.இங்கு மீன் விற்கப்படும். மீன் கடையில வேற என்ன விப்பாங்க?.இங்கு விற்கப்படும்.இங்கு விக்காம வேற எங்க..விற்கப்படும்?. இந்த போர்ட் விற்கப்படுமா? அதுவும் எடுக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.