Skip to main content

நீங்க வேறு அறைக்கு போங்க... நாடாளுமன்றத்தில் திமுகவிற்கு முக்கியத்துவம் கொடுத்த பாஜக... அதிர்ச்சியில் அதிமுக!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் நாடாளுமன்றத்தில் திமுகவிற்கு பெரிய அறை ஒதுக்க வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதோடு 10க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்ததால் நாடாளுமன்றத்தில் பெரிய அறை ஒதுக்கப்பட்டது. தற்போது திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றி மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதால் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட அறையை திமுகவிற்கு கொடுக்க வேண்டும் என்று திமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. 
 

dmk



இதனையடுத்து ஒரே ஒரு எம்.பி மட்டும் இருப்பதால் அதிமுகவிற்கு கொடுக்கப்பட்ட பெரிய அறையை காலி செய்யுமாறு  நாடாளுமன்ற அலுவலகம் கூறியுள்ளது. இதற்கு அதிமுக சார்பாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இது குறித்து திமுக எம்.பி.க்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. பின்பு அதிமுகவிற்கு வேறு அறை ஒதுக்கி தரப்படும் என்றும் அந்த அறையை காலி செய்யவும் நாடாளுமன்ற அலுவலகம் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பயன்படுத்தி வந்த பெரிய அறையை திமுகவிற்கு நாடாளுமன்ற அலுவலகம் ஒதுக்கியுள்ளது. இதே போல் தெலுங்கு தேசம் கட்சி பயன்படுத்தி வந்த அறையை 22 இடங்களில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு நாடாளுமன்ற அலுவலகம் ஒதுக்கியுள்ளது. அதிமுக பயன்படுத்தி வந்த அறையை திமுகவிற்கு எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற அலுவலகம் கொடுத்ததால் அதிமுக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்