பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் பகுதியில் தனியார் சுவற்றில் வரையப்பட்டிருந்த பா.ஜ.கவின் விளம்பரம்பத்தை தி.மு.க.வினர் அழித்துவிட்டு, அந்த இடத்தில் தி.மு.க.வின் விளம்பரத்தை வரைந்தனர். அவ்வாறு வரையப்பட்ட தி.மு.க விளம்பரத்தை பா.ஜ.க.வினர் அழிக்க முற்பட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுப் பெரும் பிரச்சனையில் முடிந்தது.
இந்த நிலையில், அதைக் கண்டித்து இன்று (22.09.2020) அண்ணா ஆர்ச் மற்றும் நங்கநல்லூர் பகுதிகளில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் காயத்திரி ரகுராம் தலைமையில் வட சென்னை மாவட்ட தலைவர் கிஷ்ணகுமார் முன்னிலையில் அதற்கான கண்டனக்கூட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டோர் “நங்கநல்லூர் சுவர் விளம்பரத்தைக் கண்டு பயப்பிடுகிறதா தி.மு.க, பி.ஜே.பி விளருது அ.தி.மு.க பதறுது” எனக் கோசமிட்டனர்.
பின்னர் பேசிய பாஜக மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் “எங்களின் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவற்றை தி.மு.க நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இன்று சென்னையில் நடந்ததை விடவும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.