Skip to main content

திமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆரம்பித்து வைத்து, கூட்டணிக் கட்சிகளில் தொடங்கி, ராஜ்யசபாவில் கட்சி பேதம் பார்க்காமல் தமிழக எம்.பி.க்கள் தூக்கிய போர்க்கொடியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய அஞ்சல்துறைத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற மத்திய அரசிடம் போராடிப் பெற்ற வெற்றிங்கிறது ஒரு பக்கம், தமிழக கட்சிகள் ஒரு பிரச்சினையில் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வெற்றி பெற்றிருப்பது இன்னொரு பக்கம். மேலும்  அஞ்சல்துறை பணியிடங்களுக்கான தேர்வில் மாநில மொழிகளை ரத்து செய்து, இந்தி ஆங்கிலத்தில் மட்டும் கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்டதற்குத்தான் இத்தனை எதிர்ப்பு. தமிழில் தேர்வு நடத்த மத்திய அரசை வலியுறுத்தணும்னு சட்டசபையில் தி.மு.க. குரல் கொடுத்தது. 
 

dmk



அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், இது தொடர்பாக டெல்லி மக்களவையில் நீங்கள் குரல்கொடுங்கள். நாங்கள் மாநிலங்களவையில் குரல் கொடுக்கிறோம்ன்னு சொன்னார். தி.மு.க. வலியுறுத்திய தீர்மானத்தை எடப்பாடி அரசு நிறைவேற்றாததால், அவங்க வெளிநடப்பு செய்தாங்க. அதே நேரத்தில், லோக்சபாவில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் பா.ஜ.க. அரசிடம் இது சம்பந்தமா வாதமும் செய்தார்கள். இந்த நிலையில் ராஜ்யசபாவில்  தி.மு.க. ஸ்டார்ட் செய்ததும் ராஜ்ய சபாவில் அ.தி.மு.க.வும் தொடர்ந்தது. எப்பவும் எதிரும் புதிருமா இருக்கிற இரண்டு கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்ததையும், கூட்டணிக் கட்சிகளும் வரிஞ்சி கட்டுறதையும் பார்த்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடத்தப்பட்ட அஞ்சலகத் தேர்வை ரத்து செய்வதாக அறிவிச்சதோட, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும்ன்னு அறிவிச்சாரு. இது தமிழகத்தின் ஒருமித்த குரலுக்குக் கிடைச்ச வெற்றி என்று அனைத்து கட்சிகளும் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்