Skip to main content

எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்... விஜயகாந்த்

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

 


தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

Vijayakanth



 

அதில், தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது. ஜாதி, மதங்கள் மற்றும் தலைவர்களின் சிலை வைத்து அரசியல் செய்தது போக, திருவள்ளுவர் சிலையை வைத்து அதன் மூலம் அரசியல் செய்வதை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


திருவள்ளுவர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர், அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். இது தேவையில்லாத பல மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்த காரணமாக அமைந்து விடும். அதனால் தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்