தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அந்த போட்டியில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரின் பெயர்களை கூறிவருகின்றனர். இதனால் தமிழிசை இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற பரபரப்பு அரசியலில் எட்டியுள்ளது.
இந்த நிலையில் பாஜக துணை தலைவராக இருந்த ஏ.பி.முருகானந்தம் பாஜக-வின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க அவர் டெல்லி விரைந்து இருக்கிறார். இதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று பிரதமர் மோடியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சந்தித்தார் என்பது குறிப்படத்தக்கது. அதே போல் கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்றபோது , அவருடன் ஒரு குழு சென்றது, அதில் ஏ.பி.முருகானந்தம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் ஒரு நம்பிக்கையான இடத்தில உள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனால் ஏ.பி.முருகானந்தம் பாஜக தலைவராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.