Published on 19/02/2019 | Edited on 19/02/2019
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது. இதையடுத்து சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை 11.50 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை முன்னிட்டு பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு செல்கிறார்.
இதையடுத்து கூட்டணி அறிவிப்பை கூட்டாக அறிவிப்பதற்காக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xn_oBvDfHd9lkvCz8hbpmKy41DPFvMpI65KkGX2Sr1Q/1550575162/sites/default/files/inline-images/rm_0.jpg)