Skip to main content

வேலூரில் வெற்றி பெற அதிமுக போட்ட ப்ளான்!அலெர்ட்டான திமுக!

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார். 
 

admk



இந்த நிலையில் வேலூர் இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர்.  வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு வரும் அகஸ்ட் 5ந் தேதி காலை தொடங்கி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஆகஸ்ட் 3ந் தேதியுடன் முடிவடையவுள்ளன. தேர்தல் களத்தில் திமுக – அதிமுக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு செல்வதைத் தடுப்பதற்காக  11 சுயேட்சை இஸ்லாமிய வேட்பாளர்களை அதிமுக களமிறக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 


இதனால் திமுகவிற்கு போகும் சிறுபாண்மையினர் வாக்குகளை தடுப்பதற்காக அதிமுக செய்த திட்டமாக கூறப்படுகிறது. இதனால் அலெர்ட்டான திமுக தரப்பு சிறுபாண்மையின அமைப்புகளின் ஆதரவை நேரில் சந்தித்து பெற்று விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவிற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் ஆதரவு கொடுத்ததும், நேற்றய தினம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளிக்காமல்  வெளிநடப்பு செய்து முத்தலாக் மசோதா நிறைவேற காரணமாக அதிமுக செயல்பட்டது வேலூரில் இருக்கும் முஸ்லீம் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர்.   

சார்ந்த செய்திகள்