








அதிமுகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்றும், நாளையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. கூட்டணிக்கு கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் 20 தொகுதிகளுக்கும், நாளைய தினம் 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துகின்றனர்.
இன்று : சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துகுடி, தென்காரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.
நாளை : திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர்.