Skip to main content

மக்கள் அதிகமா குடிக்கிறாங்க... நாங்க என்ன பண்றது... அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு! 

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பற்றியும், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியும், வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
 

admk



இந்த நிலையில், இன்று தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி இருக்கிறதா, டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைத்து மூடப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு அதிமுக அமைச்சர் தங்கமணி பதில் கூறும் போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் விற்பனை நேரமும் குறைக்கப்பட்டது. ஆனால், தமிழக மக்கள் குடிக்கிறார்கள். அதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது. இதில் தமிழக அரசு என்ன செய்ய முடியும் என்றார். மேலும்  தி.மு.க தான் ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று கூறினார்கள். அதிமுக அறிக்கையில் படிப்படியாக அமல்படுத்துவோம் என்றுதான் கூறினோம். மொத்தமாக மூடுவோம் என்று கூறவில்லை. மதுவிலை உயர்ந்துள்ளதால் டாஸ்மாக் வருவாயும் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் தங்கமணி பேசினார். அமைச்சரின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்