நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசியில் அய்யாக்கண்ணு உள்பட 111 விவசாயிகள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
விவசாயிகளின் பிரதான கோரிக்கையான விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை, விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி, நதிகள் இணைப்பு, விவசாயிகளுக்கு (60 வயதடைந்த) மாத ஓய்வூதியம், தனிநபர் இன்சூரன்ஸ் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தலைநகர் டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு தலைமையில் 141 நாட்கள் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தற்பொழுது அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி போட்டியிடும் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழக விவசாயிகள் 111 பேர் அய்யாக்கண்ணு தலைமையில் சுயேட்சையாக போட்டியிட உள்ளனர். இதற்காக தமிழகத்தில் இருந்து 2019 ஏப்ரல் 22ம் தேதி இரயிலில் வாரணாசி புறப்பட்டனர். இவர்கள் 24ந் தேதி காலை வாரணாசி சென்றடைகின்றனர். அன்றைய தினத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். பின்னர், அங்கு வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்யவும் உள்ளனர்.