கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஐஃபோன் உற்பத்தித் தொழிற்சாலை விஸ்ட்ரான். தைவான் நாட்டைச் சார்ந்த இந்த நிறுவனம், கடந்த எட்டு மாதங்களாக, தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை.
தொழிற்சங்கங்கள், மூலம் சம்பளம் தரக்கோரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அது பயனளிக்காததால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென தொழிலாளர்கள், அத்தொழிற்சாலையை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். விஸ்ட்ரான் தொழிற்சாலையில் இருந்த, கணினிகள், வாகனங்கள், கண்ணாடிகள் என அனைத்தும் தொழிலாளர்களால் நொறுக்கப்பட்டது.
பின்பு, கர்நாடக போலீசார், தடியடி நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஐஃபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், முறையாகச் சம்பளம் வழங்காத விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்படும் என்றும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.