நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் காவல்துறையினருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அந்த சொத்துக்களை ஏலம் விட்டு இழப்புக்களை ஈடுசெய்வோம் என்று உத்திரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனால் போராட்டகார்கள் போராட்டத்தை இன்னும் தீவிரபடுத்த வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.