Skip to main content

தமிழகத்திற்கு நீர் கிடைக்குமா கிடைக்காதா? - முக்கிய பரிந்துரையைக் கொடுத்த ஒழுங்காற்றுக் குழு

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

 'Water should be opened for the next 15 days' - Cauvery Management Committee recommendation

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு உத்தரவிட்ட நான்கு நாட்களுக்கு மட்டுமே ஐந்தாயிரம் கன அடி நீர் திறந்து விட்டது. அதன் பிறகு தண்ணீர் திறந்து விடுவதைக் குறைத்துவிட்டது கர்நாடகா. வினாடிக்கு 4,000லிருந்து 3,000 கன அடி நீர் தான் திறந்து விடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் காவிரி பாசனப் பகுதியில் குறுவை நெற்பயிர்கள் சாகுபடிக்காகக் காத்திருக்கிறது. உடனடியாக தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது எனப் புகாரும் கொடுக்கப்பட்டது.

 

எதிர்த்தரப்பான கர்நாடக அரசு அதிகாரிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்களால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியாது எனப் பல்வேறு கணக்குகளைக் காட்டினர். இரண்டு தரப்பினர் கருத்துக்களையும் கேட்ட ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளார். விரைவில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்