சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதால் பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை எழுந்து வந்தநிலையில், அடுத்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை, உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்யவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் அளவை 50லிருந்து 120 மைக்ரான்களாக உயர்த்தப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே 50 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம் 120 மைக்ரானுக்கு குறைவாக தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கு தடை வரவுள்ளது. இந்த தடை இரண்டு கட்டங்களாக அமலாகவுள்ளது.
இந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் 75 மைக்ரான்களுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கும், அடுத்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை 120 மைக்ரானுக்கு குறைவாக தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை அமலாக உள்ளது.