
இந்தியாவில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மஹாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. அதே போன்று தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரபங்கி கிராமத்திற்கு தடுப்பூசி போடச் சென்ற மருத்துவர்களைக் கண்ட பொதுமக்களில் சிலர் தடுப்பூசிக்குப் பயந்து சராயு ஆற்றில் குதித்தனர். இந்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. nnஅரசாங்கம் தடுப்பூசி தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளது.