நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மாமவர்கள் போராட்டம் உச்சத்தில் இருக்கின்றது.
இந்நிலையில் பாஜக தலைவர் இந்த குடியுரிமை மசோதாவை ஆதரித்து தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆதரவு தெரிவித்து பேரணிகளையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதே போன்று குஜராத்தில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி பேசியிருப்பது சர்ச்சையையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "முஸ்லிம்கள் குடியேற 150 நாடுகள் இருக்கின்றது, இந்துக்கள் குடியேற இந்தியா மட்டும்தான் இருக்கிறது" என்று பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.