தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கொண்டாடினார்.
அப்போது அவர் வயலில் வேலை செய்வது போன்றும் நெற்கதிருடன் நிற்பது போன்றும் சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, எடப்பாடி பழனிசாமியை பாராட்டியுள்ளார். அவரது அந்த பதிவில், "தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு விவசாயியாக வயல்களில் பணியாற்றுவதைக் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தனது வேர்களை ஒருபோதும் மறக்க மாட்டார். இந்த புகைப்படம் ஒரு அடையாளமாக இருக்கலாம். ஆனால் அது மக்களை உற்சாகப்படுத்துகிறது. விவசாயத்தை லாபகரமாகவும், நிலையானதாகவும் மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இது காலத்தின் தேவை" என தெரிவித்துள்ளார்.