![Young Water Dealer Attacks Motor Vehicle Inspector With Scythe; Police Investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nr6KIKfhXHRPDoBmd855DBfndyyd6O81BbMyDcmgc0Y/1679146223/sites/default/files/inline-images/n223967.jpg)
வாகன ஆவணங்களைக் கேட்ட மோட்டார் வாகன துணை ஆய்வாளரை நடுரோட்டில் வைத்து வெட்டிய சம்பவத்தில் இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டது ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஜில்லா பரிஷத் சென்டர் பகுதியில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் வெங்கட துர்க பிரசாத் என்ற நபர் இளநீர் விற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதிக்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னராவ், இளநீர் வியாபாரியிடம் வாகனத்தின் ஆவணங்களை கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த இளநீர் வியாபாரி வெங்கட துர்க பிரசாத் இளநீர் வெட்ட வைத்திருந்த அரிவாளால் ஆய்வாளர் சின்னராவை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் தப்பி ஓடிய இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இளநீர் வியாபாரி மோட்டார் வாகன துணை ஆய்வாளரை சாலையில் வைத்து தாக்கும் இந்த காட்சிகள் சாலையில் சென்றவர்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட நிலையில் அவை வைரலாகி வருகிறது.