Skip to main content

நோய்களை எதிர்க்க புதிய சிப்... பாஜக தலைவரின் பலே ஐடியா...

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

Vallabhbhai Kathiria introduces cow dung chip

 

மாட்டுச் சாணம் அனைவரையும் பாதுகாக்கும் எனவும், அது கதிர்வீச்சு தடுப்பாற்றல் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் தலைவரின் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார். 

 

மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு பசுக்களைப் பேணுதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த அமைப்பு பசு மாட்டுச் சாண தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் `காம்தேனு தீபாவளி அபியான்' என்ற நாடு தழுவிய பிரச்சார நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி உள்ளது. இதன் தொடக்க விழாவில் பேசிய இவ்வமைப்பின் தலைவரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வல்லபாய் கதிரியா, "மாட்டுச் சாணம் அனைவரையும் பாதுகாக்கும். கதிர்வீச்சு தடுப்பாற்றல் கொண்டது. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கதிர்வீச்சு சிப். கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் ஃபோன்களில் பயன்படுத்தக்கூடிய கதிர்வீச்சு சிப் இது. நோய்களை எதிர்த்துப் போராடவும் இது உதவும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்