Published on 12/09/2018 | Edited on 12/09/2018

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்.ஐ.ஏ.எம்) சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்திற்கும் கார் விற்பனைக்கும் சம்பந்தம் உள்ளதா என்று ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அதில் இந்த இரண்டுக்கும் மிக நெருக்கமான இணைப்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று எஸ்.ஐ.ஏ.எம் சங்கம், ஆகஸ்ட் மாதம், 2018-க்கான இந்தியாவின் வாகன விற்பனைகளைப் பட்டியலிட்டது. அதன்படி பயணிகள் வாகன விற்பனை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட 1% குறைந்து 1,96,847 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகியுள்ளதாகவும், இது 2017-ல் 1,98,892-ஆக இருந்தது என்றும், இருசக்கர வாகனம் பொறுத்தவரை இந்த ஆண்டு 3% உயர்ந்து 19,46,811 விற்பனையாகியுள்ளதாகவும், இது 2017-ல் 18,91,685-ஆக இருந்தது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.