Skip to main content

திருமண நிகழ்ச்சியில் போடப்பட்ட டிஜே இசை... மாரடைப்பால் இறந்த மணமகன்... 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் 25 வயது இளைஞர் தன்னுடைய திருமண விழாவில் நடைபெற்ற டிஜே மியூசிக் நிகழ்ச்சியின்போது அதீத சத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 

dj music

 

 

மணமகன் பெயர் கணேஷ், மணமகள் பெயர் ஸ்வப்னா. தெலுங்கானா பகுதிகளில் திருமண விழாவின்போது பராத் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்ச்சியின்போது ஒலிபெருக்கியை அலறவிடும் வகையில் டிஜே இசை ஒலிப்பதும் தெலுங்கானாவில் வழக்கமான ஒன்றுதான். 

திருமணமான ஒருசில மணிநேரங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மணமகன் கலந்துகொண்டு டிஜே இசைக்கு டான்ஸாடியுள்ளார். பின்னர், சத்தத்தின் காரணமாக மூச்சுவிட சிரமப்பட்டு கீழே மயங்கிவிழுந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது மணமகன் மாரடைப்பால இறந்துவிட்டார் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட மணமகளும், மணமகனின் தயாரும் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர். 

இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்களில் டி.ஜே ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான முழுமையான தடை அமலில் இருக்கும்போது இத்தகைய சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்