Published on 23/09/2020 | Edited on 23/09/2020

தீபிகா படுகோனே உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விவகாரம், பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணத்தையடுத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.