Published on 23/09/2020 | Edited on 23/09/2020

தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட ஏழு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (23/09/2020) ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
அதேபோல் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.
கரோனா தடுப்புக்காக தமிழக அரசு ஏற்கனவே கோரிய ரூபாய் 9,000 கோடியை வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறுகின்றன.மேலும், கரோனா தடுப்பு மானியத்தை கூடுதலாக வழங்கவும், பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.