Published on 07/02/2019 | Edited on 07/02/2019

நாடு முழுக்க புதிதாக 12,000 மெகா வாட் அளவில் சூரிய மின் சக்தி உற்பத்தியை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பொருளாதார அமைச்சரவை குழு, நாடு முழுக்க புதிதாக 12,000 மெகா வாட் அளவில் சூரிய மின் சக்தி உற்பத்தியை தொடங்குவதன் மூலம் ஒரு வருடத்திற்கு கிட்டதட்ட 60,000 பேருக்கு கட்டுமான பிரிவில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், 25 வருட கால அளவிற்கு கிட்டதட்ட 18,000 பேருக்கு பராமரிப்பு பிரிவில் வேலை வாய்ப்பு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுவதற்கு உந்துதலாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.