Skip to main content

60 லட்சம் பெண்கள் பயனடைந்த மம்தா பானர்ஜியின் திட்டம்; ட்விட்டரில் பெருமிதம்...

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

tggfgf

 

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் கல்வியை ஊக்குவிக்கவும் இளம்வயது திருமணத்தை தடுக்கவும் ஆரம்பித்த 'கன்யாஸ்ரீ திபாஸ்' என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, 'ஏராளமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு யுனிசெஃப் அளவில் சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 60 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்' என கூறினார். மேலும் மேற்கு வங்கத்தின் கல்வி வளர்ச்சி பற்றி தெரிவித்துள்ள அவர், '2011 முதல் மேற்கு வங்கத்தில் கல்வி உள்கட்டமைப்பு கணிசமாக முன்னேறியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 28 புதிய பல்கலைக் கழகங்களை அமைத்துள்ளோம். அதே நேரத்தில் 50 புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன' என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்