Skip to main content

'இதில் பாண்டவர்கள் யார்? கௌரவர்கள் யார்?'- சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா!

Published on 25/06/2022 | Edited on 28/06/2022

 

'So who are the Pandavas?  '- Controversial Ram Gopal Varma!

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நேற்று மனுத்தாக்கலை முடித்துள்ள திரௌபதி முர்மு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவுகளை திரட்டி வருகிறார்.

 

இந்நிலையில் பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரௌபதி குடியரசு தலைவர் என்றால் யார் பாண்டவர்கள்? மிகவும் முக்கியமாக யார் கவுரவர்கள்?' என பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம் கோபால் வர்மாவின் இந்த சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து இந்த கருத்து எஸ்.டி,எஸ்.சி பிரிவினரை இழிவுபடுத்துவதாக இருப்பதாக தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கூடூர் நாராயண ரெட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.  ஆனால் தான்  திரௌபதி முர்முவை அவமதிக்கவில்லை என ராம் கோபால் வர்மா ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணத்தில் திடீர் சந்தேகம்; தனி அறைக்கு கூட்டிச்சென்று டவுட் கேட்ட ராமதாஸ்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Sudden doubt in the document; Ramdas went to a private room and asked for a dowt

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில்  நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.

நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக, எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

பாமக-பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த சில நிமிடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி ஒப்பந்தத்திற்கான ஆவணத்தை படித்துப் பார்க்கையில், அதில் அவருக்கு சில சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து விளக்கம் கேட்க பாஜக தலைவரை தனி அறைக்கு பாமக ராமதாஸ் கூட்டிச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மக்களவை தேர்தலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.