உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் ஸ்மிருதி இராணிக்கு ஆதரவாக பரவுலியா கிராமம் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திரா சிங் (வயது 50) பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சுரேந்திரா சிங், நேற்றிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் மரணம் அடைந்து விட்டார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுரேந்திரா சிங் மீது துப்பாக்கிச் சூட நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த ஸ்மிருதி இராணி, அங்கு விரைந்தார். அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் உதவியாளர் சுரேந்தர் சிங்கின் உடலை ஸ்மிருதி இராணி சுமந்து சென்றார்.