Published on 26/12/2018 | Edited on 26/12/2018
பொதுத்துறை வங்கிகள் கடந்த மூன்றரை வருடங்களில் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து 10,000 கோடி ரூபாயை அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக வந்த தகவல் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் எஸ்.பி.ஐ வங்கி, எதற்காக பொதுமக்களிடம் இருந்து அபராதம் உள்ளிட்ட பெயர்களில் சிறு தொகையை வசூல் செய்கிறது என்பதற்கு விளக்கம் அளித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு போன்றவைகளுக்காக பெரும் தொகையை எஸ்.பி.ஐ வங்கி முதலீடு செய்வதாகவும். அதனை ஈடு செய்ய வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் உள்ளிட்ட பெயர்களில் சிறு தொகையை வசூல் செய்வதாக எஸ்.பி.ஐ விளக்கம். இந்தியாவில் குறைவான சேவைக் கட்டணம் வசூலிக்கும் வங்கிகளில் தங்கள் வங்கியும் ஒன்று என்று தெரிவித்துள்ளது.